ஒலிம்பிக் தீபச்சுடரை ஏந்தும் நடிகர் ஜாக்கி சான்.

பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சான் (Jackie Chan) உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபச்சுடரை ஏந்தவுள்ளார்.
நாளை மறுநாள் (28 ஆகஸ்ட்) போட்டியின் தொடக்க விழா நடைபெறுவதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்பு 70 வயது ஜாக்கி சான் ஒலிம்பிக் தீபச்சுடரை ஏந்திச் செல்வார்.
அவருடன் மேலும் சில பிரபலங்கள் தீபச்சுடரை ஏந்திச் செல்லும் நிகழ்வில் பங்கெடுப்பர்.
நேற்று முன்தினம் (24 ஆகஸ்ட்) பிரிட்டனில் தீபச்சுடர் ஒளியூட்டப்பட்டது. உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் தொடங்கிய ஸ்டோக் மாண்டவில் (Stoke Mandeville) கிராமத்தில் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
சேனல் சுரங்கப்பாதை வழி அது பிரான்ஸுக்குக் கொண்டுவரப்பட்டது.
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டி பாரிஸ் நகரில் நடைபெறும்.
வரும் 29ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ஆம் தேதி போட்டிகள் நடக்கும்.