நீட்டிக்கிறது Telegram உரிமையாளர் தடுப்புக்காவல் : இலோன் மஸ்க் விசனம்.

பிரான்ஸ் அரசாங்கம், Telegram செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பேவல் டூரோவுக்கான (Pavel Durov)தடுப்புக்காவலை நீட்டித்துள்ளது.

25 ஆகஸ்ட் பாரிஸ் விமான நிலையத்தில் 39 வயது டூரோவ் கைது செய்யப்பட்டார்.

Telegram செயலியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

Telegram தளத்தில் போதுமான நெறியாளர்கள் இல்லாததால் குற்றச்செயல்கள் ஏற்படுகின்றன என்றும் செயலியின் நிர்வாகம் காவல்துறையுடன் ஒத்துழைப்பதில்லை என்றும் பிரான்ஸ் அதிகாரி ஒருவர் சொன்னார்.

திரு Durovவிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், ஒரு சமூக ஊடகத் தளத்தில் பகிரப்படும் தகவல்களுக்கு உரிமையாளரைக் கைது செய்திருப்பது சரியில்லை என்றும் Telegram நிறுவனம் அறிக்கையில் சொன்னது.

அஸெர்பைஜானிலிருந்து (Azerbaijan) அவர் தனிப்பட்ட விமானத்தில் வந்து இறங்கியபோது பாரிஸில் அவர் கைதானார்.

ஆரம்பக்கட்ட விசாரணை அதிகபட்சம் நான்கு நாள் நீடிக்கலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கச் செல்வந்தரும் X தளத்தின் உரிமையாளருமான இலோன் மஸ்க் (Elon Musk), ஐரோப்பாவில் சுதந்திரப் பேச்சுரிமை தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகச் சொன்னார்.

Leave A Reply

Your email address will not be published.