ரணிலின் சர்வதேச நாணய நிதியத்தின் விவாத சவாலுக்கு சஜித் மற்றும் அனுர இருவரும் மௌனம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மீளாய்வு செய்வது தொடர்பில் தம்முடன் இணைந்து IMF உடன் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு விடுத்த சவாலை இதுவரை எதிர்க்கட்சிகள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மாற்ற முடியாது என ஜனாதிபதி நேற்று தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் மத்தியஸ்தர், கடனளிப்பவர்கள் அல்ல என்றும், கடனளிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளுடன் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எட்டப்பட்ட ஐஎம்எஃப் ஒப்பந்தத்தை மாற்ற முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.
சஜித் பிரேமதாச அல்லது அநுர திஸாநாயக்க ஐஎம்எஃப் ஒப்பந்தத்தை மாற்றுவோம் என கூறினால், சர்வதேச நாணய நிதியத்தோடு இணைந்து இணைய விவாதம் ஒன்றை நடத்த முன்வருமாறு அவர்களுக்கு சவால் விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பகிரங்கமாக சவால் விடுத்திருந்தார்.
ஆனால் அவர் சவால் விடுத்து 24 மணித்தியாலங்கள் கடந்துள்ள போதிலும் சஜித் பிரேமதாச அல்லது அனுர திஸாநாயக்க அவரது சவாலை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
முன்னதாக, SJB, NPPஇடையில் இரண்டு விவாதங்கள் நடத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவை இரண்டும் நடைபெறவில்லை.
ஒரு விவாதத்தில் சஜித் பிரேமதாச, அனுர திஸாநாயக்கவுடன் விவாதத்திற்கு வராததால், அனுர திஸாநாயக்க போட்டியற்ற வெற்றியாக கருதுவதாக அறிவிக்கப்பட்டது.