கனிய வளங்களை அடையாளப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.
அபிவிருத்தி திட்டங்களுக்காக பயன்படுத்தத்தக்க கனிய வளங்களை அடையாளப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.
வீதி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தத்தக்க கிரவல், மணல், கல் ஆகியவற்றை உள்ளடக்கிய கனிய வளங்களை அடையாளங் காணும் முகமாக, குறித்த கனிய வளங்களுடன் தொடர்புடைய திணைக்களத் தலைவர்களுடனான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் இன்று(06) மு.ப 09.30மணிக்கு மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடலில் கடந்த காலங்களில் இவ் வளப்பயன்பாடுகளின் நிலை தொடர்பான விடயங்களை அரசாங்க அதிபர் கேட்டறிந்து கொண்டதுடன் இனங்காணப்பட்ட வளங்கள் தொடர்பான தகவல்கள் உள்ளடங்கிய அறிக்கையினை விரைவாக சமர்ப்பிக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
குறித்த கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், வனபாதுகாப்பு திணைக்கள உதவிப்பணிப்பாளர், உதவி பிரதேச செயலாளர்கள், வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர்கள், தொல்பொருள் திணைக்கள வலய அலுவலர் என பல்வேறு தரப்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.