பெப்ரவரி முதல் இலங்கையில் மீண்டும் எண்ணெய், எரிவாயு வரிசைகள்..

தற்போதைய ஆட்சியை மாற்றி சஜித் பிரேமதாசவுக்கோ அல்லது அநுர திஸாநாயக்கவுக்கோ மக்கள் ஆட்சியை வழங்கினால் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் மக்கள் வரிசையாக நிற்கும் யுகத்திற்கு செல்ல தயாராக வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற சட்டத்தரணி சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் கொண்டு வரப்படுமாயின் அவ்வாறானதொரு கதி நிச்சயம் ஏற்படும்.

‘அவர்கள் ஒரு அணியாக இரண்டு ஆண்டுகளில் அதைச் செய்தார்கள். 18 நாடுகள் IMF, World Bank மற்றும் ADB ஆகியவற்றுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, மேற்கொண்டு பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. நான் கேட்பது என்னவென்றால், அவர்கள் தேர்தல் அறிக்கைகளில் சொல்வதைச் செய்தால், ஒப்பந்தங்கள் முறிந்துவிடும். அதற்கென தனி பணம் தேட வேண்டும். VAT குறைக்கப்பட்டால், வருமான வரியை அதிகரிக்க வேண்டும். அதை மாற்ற முடியாது.

IMF உடன் பேசுகிறோம் என்று சொல்கிறார்கள். ஐஎம்எப்ல பேசி பிரயோஜனம் இல்லை, அதிகாரமும் இல்லை. நாடுகளுடன் பேசுவது எளிதல்ல. உடன்படிக்கைகளின்படி அவர்கள் செயல்படுவார்களா? அடுத்த ஆறு மாதங்களில் என்ன நடக்கும்? அவர்கள் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையில் திருத்தம் கொண்டு வரப்படும் என்றால் வரிசைகளின் சகாப்தத்திற்கு தயாராகுங்கள் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.