திருகோணமலை ஆயரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற சஜித்!

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாஸ, திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆண்டகையை நேரில் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசிகளைப் பெற்றுக்கொண்டார்.
நேற்று திருகோணமலை, சேருவில நகரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர், திருகோணமலை மறைமாவட்ட ஆயரை சஜித் பிரேமதாஸ சந்தித்து ஆசி பெற்றதுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பிலும் பேசினார்.