பள்ளி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிப்பது தொடர்பில் உடன்பாடு.

மாநகராட்சிப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் இனி பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ள இயலும்.

அதற்கேதுவாக, மாணவர்களுக்குப் பிரெஞ்சு மொழி கற்பிக்கும் வகையில், பிரான்ஸ் தூதரகத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

முதற்கட்டமாக, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் நான்கு தொகுதியினரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படும் என்றும் அதன்பின் எல்லாப் பள்ளிகளிலும் அம்மொழியைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிட்டீஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டத்தின்கீழ், மேம்படுத்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பிரெஞ்சு மொழியைப் பயிற்றுவிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக் கல்வித்துறையின்கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் ஏறத்தாழ 120,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.