IMF விவாதத்துக்கு அநுர வரமாட்டாராம்.. தனியாகப் பேசுகிறாராம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நேரடி உரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த சவாலுக்கு தேசிய மக்கள் படை பதிலளித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் , தேவையானபடி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வது அல்லது ஏற்றுக்கொள்வதில்லை என நேரடியாகக் கூறாமல், கட்சித் தலைவர் அந்த உரையாடலில் பங்கேற்க மாட்டார் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு சஜித் பிரேமதாச தரப்பினர் இணைந்து கொள்ள தயாராக இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றுவது தொடர்பான இந்த உரையாடலில் கலந்துகொள்ளுமாறு சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகியோருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.