ஐ.தே.க பிரமுகர்களை அவரவர் தொகுதிகளுக்கு செல்ல உத்தரவிட்ட ரணில்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு உடனடியாக தமது தொகுதிகளுக்குச் சென்று ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அறிவித்துள்ளார்.
கொழும்பில் தங்காமல் வீடு வீடாகச் செல்லும் வேலைத்திட்டத்தை தமது தொகுதிகளுக்குச் சென்று ஆரம்பிக்குமாறும் , ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகப் பொறுப்பாளர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்தன, காலி மாவட்டத்தில் தலைவர் வஜிர அபேவர்தன, கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, குருநாகல் மாவட்டத்தில் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம், கொழும்பு மாவட்டத்திலும் வடமாகாணத்திலும் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க, பொருளாளர் ஃபிரோ பாரூக், மாவனல்ல பிரதேசத்தில் பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர் ஆகியோரை தொகுதிகளுக்குச் சென்று பணியாற்ற உத்தரவிட்டுள்ளார்.
சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா ஆகியோரை கட்சித் தலைமையகத்தில் தங்கியிருந்து அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.