UNP கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டாரவை அகற்றிய ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

நம்பகமான வட்டாரங்களில் இருந்து வந்த தகவல்களின்படி,

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் தொடர்பில் கிடைக்கப்பெற்றதாகக் கூறப்படும் சில பாரதூரமான விடயங்களை கருத்திற்கொண்டு ரணில் விக்ரமசிங்க இவ்வாறான தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம் கட்சியின் செயலாளரை எந்த நேரத்திலும் நியமிக்கவும் நீக்கவும் கட்சியின் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு அவர் கடமைகளுக்காக வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தவிர்ந்த ஏனையவர்களிடம் தேர்தல் செயற்பாடுகளுக்கான பொறுப்புக்களை ஒப்படைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நேற்று (28) ஏற்பாடு செய்துள்ளார்.

பிரதிப் பொதுச் செயலாளர் கிரிஷாந்த தியோடர், சிறிகொத்த பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷமல் செனரத், தேர்தல் நடவடிக்கைகளின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா, ஆகியோரை ‘சிறிகொத்த’ கட்சியின் தலைமையகத்தில் தங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.