கிளப் வசந்த கொலைக்கு ஆதரவளித்த மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கைது!
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மற்றும் கார் சாரதிக்கு உதவி மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
இதேவேளை நேற்று (28) இரண்டாவது துப்பாக்கிதாரியும் காரின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணதுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பாணதுறை பின்வத்த பகுதியில் வைத்து இவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.