திசைகாட்டி தேர்தல் அலுவலகம் தீ வைத்து எரிக்கப்பட்டது!

மீரிகம, பொகலகம, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இந்த தீ விபத்தில் அலுவலகமும் , இருந்த கட்டிடமும் சேதமடைந்தது.
நேற்று பிற்பகல் பிரச்சார அலுவலகத்தில் இருந்த மேசைகள், கதிரைகள் மற்றும் விளம்பர பலகைகளுக்கு யாரோ ஒருவர் தீ வைத்துள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.