ஐரோப்பிய ஒன்றியம் நாடு தழுவிய ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பை ஆரம்பித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை அவதானிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் 13 குழுக்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் நோக்கில் கொழும்பில் இருந்து கலைந்து சென்றதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
26 பார்வையாளர்கள் உள்ளனர்.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நாச்சோ சஞ்சின் அமுர், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணியின் தலைவராக உள்ளார்.
தேர்தல் காலத்தில் இந்தக் குழுக்கள் , தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள், கட்சிப் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட கட்சிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இலங்கையில் ஜனநாயக செயல்முறைக்கு ஆதரவளிப்பது, தேர்தல் நடைமுறையில் நம்பிக்கையை அதிகரிப்பது, மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பளித்தல் மற்றும் பலப்படுத்துதல் ஆகியவை ஐரோப்பிய ஒன்றிய பணியின் முக்கிய நோக்கங்களாகும்.