மத்திய வங்கியின் ஆளுநருக்கு வாயை மூடிக்கொள்ளச் சொன்ன திசைகாட்டி.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நந்தலால் வீரசிங்க பொருளாதாரம் தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் ஒரு விடய நிபுணர் என்ற வகையில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் நாடு எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய வங்கியின் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்து செய்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரை குற்றவாளி என உச்ச நீதிமன்றம் கண்டறிந்ததை நினைவுகூர்ந்த ஜயதிஸ்ஸ, மத்திய வங்கி ஆளுநர் அரசியல்வாதிகள் சொல்வதைக் கூறக்கூடாது, பாட அறிவைப் பயன்படுத்தி நடைமுறை விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.