திசைகாட்டியின் ஆதரவாளர் ஒருவர் பொஹொட்டுவ ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில்…
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர் மினுவான் கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளரின் வீட்டுக்கு வந்த , மொட்டு ஆதரவாளர்கள் இருவர், அவரை திட்டி, திசைகாட்டி வேலை செய்ய வேண்டாம் என கூறியுள்ளனர்.
இலக்கம் 83/டி வெல்லிய வடக்கு மினுவாங்கொடையைச் சேர்ந்த பூர்ணிமா பிரபாத் (வயது 39) என்ற திருமணமான தென்னகோன் முதியன்சேலாகே என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகக் கூறும் மினுவாங்கொடை பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.