மலையாளத் திரைப்படத் துறை பாலியல் குற்றங்களுக்காகச் சில நட்சத்திரங்களிடம் விசாரணை…
இந்தியாவின் மலையாளத் திரைப்படத் துறையில் ஆண் நட்சத்திரங்கள் சிலர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் பாலியல் குற்றங்கள் புரிந்த சந்தேகத்தின்பேரில் விசாரணையை எதிர்நோக்குகின்றனர்.
திரைப்படத் துறையில் பெண் சந்தித்துள்ள பிரச்சினைகளை எடுத்துரைக்கும் அறிக்கை ஒன்று கடந்த வாரம் வெளியானதை அடுத்து சர்ச்சை கிளம்பியது.
படப்பிடிப்பு இடங்களில் கழிப்பறைகள், உடை மாற்றுமிடங்கள், போக்குவரத்து வசதிகள், தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு பற்றாக்குறை இருந்ததாக அறிக்கை சொன்னது.
திரைத் துறையில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவும் கேரள அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட Hema எனும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டது.
அண்மை நாள்களில் நடிகைகள் சிலர் ஆண் நடிகர்களுக்கு எதிராகக் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதுவரை 16 புகார்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
சர்ச்சைக்கு இடையே மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாகக் குழு கலைக்கப்பட்டுள்ளது.
அதன் தலைவரான நடிகர் மோகன்லால் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.