Air India பெயரின் கீழ் செயல்படவுள்ள Vistara.
Vistara விமானச் சேவை இவ்வாண்டு (2024) நவம்பர் 12ஆம் தேதியிலிருந்து Air Indiaவின் கீழ் செயல்படவிருக்கிறது.
Vistara, Air India ஆகிய நிறுவனங்கள் இவ்வாண்டு இறுதியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை முன்னிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமம் தற்போது Vistara நிறுவனத்தின் 49 விழுக்காட்டுப் பங்குகளைக் கொண்டுள்ளது.
இந்தியாவின் Tata குழுமத்தின் கீழ் செயல்படவுள்ள புதிய கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு அனுமதி கிடைத்துள்ளது.
கூட்டு நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு 25.1 விழுக்காட்டுப் பங்குகள் இருக்கும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதற்காக 250 மில்லியன் டாலர் முதலீடு செய்யும்.
Vistara, Air India ஆகிய நிறுவனங்கள் இணைந்தவுடன் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 599 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.