விமானத்தின் கழிவறையில் பிள்ளையை விட்டுப் பூட்டிச் சென்ற இரு பெண்கள்.
இரு பெண்கள் ஜூனியாவ் (Juneyao) விமானத்தின் கழிவறையில் பிள்ளையை விட்டுப் பூட்டிச் சென்றதாகக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
அது இணையவாசிகளிடையே பெருமளவில் சர்ச்சையைக் கிளப்பியது.
இரு பெண்களில் ஒருவர், கோ திங்திங் (Gou Tingting) அந்தக் காணொளியைச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்.
காணொளியில் அவர் அழுதுகொண்டிருந்த பிள்ளையைத் தூக்கிக்கொண்டுக் கழிவறைக்குள் நுழைவதைக் காண முடிகிறது.
மற்றொரு பெண், அழுவதை நிறுத்தினால் மட்டுமே கழிவறையைவிட்டு வெளியேறலாம் என்று பிள்ளையிடம் கூறியதையும் பார்க்கலாம்.
சக பயணிகளின் நலனைக் கருத்தில்கொண்டு உதவ முன்வந்ததாக அவர் சொன்னார்.
ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பலர் அவரைக் குறைகூறினர்.
பிள்ளைக்குப் பாடம் கற்பிக்கும் நோக்கத்தில் அவ்வாறு செய்ய அந்தப் பிள்ளையின் பாட்டி அனுமதி வழங்கியதாக விமான நிறுவனம் தெரிவித்தது.
விமானம் சென்ற வாரம் (24 ஆகஸ்ட்) சீனாவின் குய்யாங்கிலிருந்து (Guiyang) புறப்பட்டு ஷாங்ஹாய் (Shanghai) நகரில் தரையிறங்கியதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
குறைகூறல்களைக் கேட்ட பின்னர் கோ,
“பிள்ளையை அமைதிப்படுத்தினால், அனைவரும் இளைப்பாறலாம் என்று விரும்பினேன்” எனக் கூறியதாக BBC செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.