உக்ரேனின் ஆகாயப்படைத் தளபதி பதவி நீக்கம்.
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) அந்நாட்டு ஆகாயப்படைத் தளபதியைப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார்.
உக்ரேனின் புதிய F-16 ரக போர் விமானம் அழிக்கப்பட்டதாக விவாதம் நீடிக்கும் வேளையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகாயப்படைத் தளபதியின் பதவி நீக்கத்துக்கு என்ன காரணம் என்று திரு ஸெலென்ஸ்கி கூறவில்லை. ஆனால் வீரர்கள் அனைவரையும் கவனித்துக்கொள்ள வேண்டியது தனது பொறுப்பு என்று அவர் Telegram பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களை மேற்கத்தியக் கூட்டணி உக்ரேனுக்கு வழங்கியது. அவற்றுள் ஒன்று இம்மாதத் தொடக்கத்தில் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளானது. விமானி மரணமடைந்தார்.
எதிரிப்படையின் தாக்குதல் அதற்குக் காரணமல்ல என்று உக்ரேன் கூறியிருந்தது.