மேற்குக் கரை தாக்குதலில் ஹமாஸ் ராணுவத் தளபதி கொல்லப்பட்டார் (Video)
மேற்குக் கரையின் ஜெனின் (Jenin) நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் ராணுவத் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பெருமளவு ஆயுதங்கள், வெடிபொருள்கள், ரொக்கம் வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் கூறியது.
தப்பியோட முயன்ற கிளர்ச்சியாளர்கள் இருவர் ஆகாயத் தாக்குதலில் மாண்டனர்.
மேற்குக் கரையில் இஸ்ரேல் மூன்றாவது நாளாய்த் தாக்குதலைத் தொடர்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 20க்கு உயர்ந்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலைச் சீனா கண்டித்துள்ளது. காஸாவில் நடப்பது போன்ற மனிதாபிமானப் பேரழிவை மேற்குக் கரையில் அனுமதிக்கமுடியாது என்று பெய்ச்சிங் சொன்னது.
கிளர்ச்சியாளர்களின் தாக்குதலை முறியடிக்க ராணுவ நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஆனால் காஸா போரை விரிவுபடுத்தி மேற்குக் கரையில் இஸ்ரேலின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சி அது என்று பாலஸ்தீனர்கள் கருதுகின்றனர்.