பிரேசிலில் X ஊடகத்துக்குத் தடை?
பிரேசில் பொய்ச்செய்திகள் தொடர்பான சர்ச்சை தொடர்பில் X சமூக ஊடகத்துக்குத் தடைவிதித்துள்ளது.
பிரேசில் உச்ச நீதிமன்றம் X சமூக ஊடகம் ஒரு சட்டப் பிரதிநிதியை நியமிக்கக் காலக்கெடு விதித்திருந்தது. X அதை நிறைவேற்றத் தவறியது.
நீதிமன்ற உத்தரவுகளை மதித்து ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தும் வரை X சமூக ஊடகத்துக்கு உடனடித் தடை விதிக்க பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
பொய்த்தகவல்களைப் பரப்பும் பல கணக்குகளை நீக்கும்படி X சமூக ஊடகத்துக்கு சென்ற ஏப்ரலில் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பிரேசில் நீதிபதி அரசியல் காரணங்களுக்காகக் கருத்துச் சுதந்திரத்தைச் சிதைப்பதாக X சமூக ஊடக உரிமையாளர் இலோன் மஸ்க் (Elon Musk) சாடினார். கருத்துச் சுதந்திரமே ஜனநாயகத்தின் அடிப்படை என்றார் அவர்.
அடுத்த 24 மணிநேரத்துக்குள் பிரேசிலில் X சமூக ஊடகம் முடக்கப்படும் என்று தெரிகிறது.