பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது கொலைக் குற்றச்சாட்டுகள்.
பங்களாதேஷில் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) மீது புதிதாக 2 கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
டாக்கா நீதிமன்றத்தில் அவை தொடர்பான மனுக்கள் நேற்று (31 ஆகஸ்ட்) சமர்ப்பிக்கப்பட்டன.
பங்களாதேஷில் அரசாங்க வேலைக்கான இடஒதுக்கீட்டு முறையைக் கைவிட வலியுறுத்திப் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது.
ஒரு கட்டத்தில் அது வன்முறையாய் உருவெடுத்தது.
நிலைமை கைமீறிப் போனபோது, பிரதமராய் இருந்த திருவாட்டி ஹசீனா பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறினார்.
போராட்டத்தின்போது 3 பேர் கொலை செய்யப்பட்டதாகவும் அதில் திருவாட்டி ஹசீனாவுக்கும் அவருடைய முன்னாள் அமைச்சர்களுக்கும் தொடர்புள்ளதாகவும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை திருவாட்டி ஹசீனாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை மொத்தம் 84.
கொலை, இனப்படுகொலை, ஆள்கடத்தல் முதலிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.