“குழந்தை உதைப்பதை நிறுத்தவில்லை” – வெண்கலப் பதக்கம் வென்ற ஜொடி கிரின்ஹெம்.
கர்ப்பமாக இருந்தாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் வில்வித்தை (Archery) வீராங்கனை ஜொடி கிரின்ஹெம் (Jodie Grinham).
பாரிஸ் உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட அவர் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்.
தனிநபர் போட்டியில் உடற்குறையுள்ளோர் ஒலிம்பிக் பதக்கத்தை கிரின்ஹெம் வெல்வது இதுவே முதல்முறை.
2016ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அவர் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
“நானும் என்னுடைய குழந்தையும் ஆரோக்கியமாக இருந்தால் போதும்.. போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்று எனக்குத் தெரியும்,” என்றார் அவர்.
“என் குழந்தை உதைப்பதை நிறுத்தவில்லை.. அம்மா வெளியே என்ன நடக்கிறது.. சத்தமாக இருக்கிறது என்று என் குழந்தை என்னிடம் சொல்வது போல் இருந்தது,” என்று கிரின்ஹெம் வேடிக்கையாகச் சொன்னார்.