பள்ளிவாசலுக்குச் செல்லவிருக்கும் போப்.

இந்தோனேசியாவிற்குச் செல்லவிருக்கும் போப் பிரான்சிஸ் நாளை மறுநாள் (3 செப்டம்பர்) ஜக்கார்த்தாவில் உள்ள பள்ளிவாசலுக்குச் செல்லவிருக்கிறார்.
அந்தப் பள்ளிவாசலில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது.
பள்ளிவாசலிலிருந்து செல்லும் ஒரு சுரங்கப்பாதை கத்தோலிக்க தேவாலயத்திற்கு இட்டுச் செல்லும்.
28.3 மீட்டர் நீளமுள்ள அந்த “நட்புச் சுரங்கப்பாதை” 2020ஆம் ஆண்டு அரசாங்கத்தால் கட்டப்பட்டது.
பிரபல இஸ்டிக்லால் பள்ளிவாசலையும் Our Lady of the Assumption தேவாலயத்தையும் அது இணைக்கிறது
ஆசிய-பசிபிக் வட்டாரத்திற்குப் போப் மேற்கொள்ளவிருக்கும் 12 நாள் பயணத்தில் அது ஓர் அங்கமாக அமையும்.
சமயங்களுக்கிடையே நல்லிணத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்.
12 நாள் பயணத்தில் அவர் இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி (Papua New Guinea), திமோர் லெஸ்ட்டே (Timor-Leste), சிங்கப்பூர் ஆகியவற்றுக்குச் செல்வார்.