ரோ பிரதானி வந்து சென்றார்.. ஜனாதிபதி தேர்தல் தலைகீழாக மாறியது.. வேஷம் மாற போகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சியுள்ள நிலையில், வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உள்ளகக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியப் புலனாய்வுப் பிரிவின் பிரதானியின் திடீர் இலங்கை விஜயத்தின் பின்னரே இந்தக் கலந்துரையாடல்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இதன்படி, உயர் பதவிக்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த ஒருவர் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அப்படி நடக்கவில்லை என்றால் எதிர்கட்சியின் மற்றொரு பலமானவரை அதற்கு சம்மதிக்க வைக்கும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.
அத்தோடு, இந்திய புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியின் விஜயத்தின் பின்னர் வடக்கிலுள்ள அரசியல் கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது அரசியல் நிலைப்பாடுகளை மாற்றத் தயாராகி வருவதாகவும் அறியமுடிகிறது.
ஏறக்குறைய ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த வலுவான அரசியல் மாற்றம் ஏற்படும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.