இலவச பசளை வழங்குவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்.
புதுவெளி விவசாய அமைப்பிற்குட்பட்ட விவசாயிகளுக்கு காலபோக வேளாண்மைக்கான இலவச பசளை வழங்குவது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் இன்று (06) விவசாய அமைப்பின் தலைவர் S.H அனீஸ் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சிலாவத்துறை கமலநல அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ஜூட், விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் T.M அஸ்கர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஜதீர் உட்பட புதுவெளி கிராமத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.