iPad ஐ , Huawei தயாரிக்கிறது எனஅனுர பேசிய பேச்சு நகைப்பாகியது (Video)

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர திஸாநாயக்க இரண்டு கையடக்க தொலைபேசி வர்த்தக நாமங்களை குழப்பி சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல் மேடையில் ஆப்பிள் மற்றும் ஹூவாய் தயாரிப்புகள் குறித்து அவர் கருத்து தெரிவித்திருந்த நேரத்தில் அது நடந்தது.
ஐபேட் Huawei நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்றும் தன்னிடம் ஐபோன் ஒன்று இருப்பதாகவும் அனுர திஸாநாயக்க குறிப்பிட்டதனால் , அவரது அறிவு குறித்து மீம்கள் பரவி வருகின்றன.
Huawei நிறுவுனம் எந்த iPad ஐயும் உருவாக்கவில்லை, iPad முற்றிலும் ஆப்பிள் தயாரிப்பு.
எவ்வாறாயினும், அனுர திஸாநாயக்கவின் கூற்று உண்மையாக இருக்குமானால், உலகின் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Huawei ஆகிய இரு நிறுவனங்களுக்கிடையில் வர்த்தகப் போர் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
இது அமெரிக்க-சீனா ராஜதந்திர போராக மாற வாய்ப்பு உள்ளது.
இல்லையெனில், ஆப்பிள் மற்றும் ஹூவாய் இடையே ஒரு வழக்கு தொடர அதிக வாய்ப்பு உள்ளது, அது பில்லியன் டாலர் இழப்பீட்டில் முடிவடையும்.