மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை!
மணிப்பூரில் மீண்டும் ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய் தேய் சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் 220க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர் .இதுவரை 32 பேர் காணவில்லை. மேலும் பழங்குடியின பெண்கள் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமில்லாது 5,036 தீ வைக்கப்பட்டது . ஏறத்தாழ 11,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஒன்றை ஆண்டுகளாக நடைபெற்ற வன்முறைகள் காரணமாக தற்பொழுது வரை பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூர் காங்போக்பியில் உள்ள நகுங் கிராமத்தில் மீண்டும் ட்ரோன் மூலம் வன்முறையாளர்கள் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர் . அப்போது குக்கி சமூகத்தைச் சேர்ந்த, ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் இதுபோன்ற தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.