சந்திரகுமாரும் சஜித்துக்கு ஆதரவு – கிளிநொச்சியில் இன்று இருவரும் கூட்டாக அறிவிப்பு.

சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச்செயலாளர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் இடையே இன்று சமத்துவக் கட்சியின் கிளிநொச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பையடுத்து இது தொடர்பான அறிவிப்பை மேற்படி இருவரும் ஊடகங்கள் முன்னிலையில் அறிவித்தனர்.
1994 – 2000 மற்றும் 2010 – 2015 காலகட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய சந்திரகுமார், நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்களில் பிரதித் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.
2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயேச்சையாக இவர் போட்டியிட்டார்.


