3 குரங்குகள் இறந்து கிடந்த தொட்டியின் தண்ணீரை, பல நாட்களாக குடித்த மாணவர்கள்..
நேற்று முன்தினம் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கல்லூரியின் தண்ணீர் தொட்டியில் இருந்து அழுகிய நிலையில் மூன்று குரங்குகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அக்கல்லூரியில் நடைபெற்ற சிரமதான பணிகளில் பெற்றோர்கள் குழு ஒன்று வந்து தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது , இந்த மூன்று குரங்கு பிணங்கள் கிடைத்துள்ளன. சுமார் 400 பள்ளி மாணவர்கள் அந்த தண்ணீர் தொட்டியில் இருந்து கடந்த 3 மாதங்களாக குடிநீர் பெற்று வந்துள்ளனர்.
தண்ணீர் தொட்டியின் மேல்பகுதி மூடாமல் இருந்தமையால் , 3 குரங்குகளும் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்தது வரை பள்ளி அதிகாரிகளுக்கு தெரியாமல் இருந்தமை பெரும் பிரச்னையாகி உள்ளது என பெற்றோர்கள் கூறுகின்றனர் , தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்த குரங்குகள் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளன.
அந்த குரங்குகளின் இறந்த உடல்கள் குடிநீருடன் கரைந்துள்ளன.
தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து, கிருமி நாசினி திரவத்தை தெளித்து, வீடுகளுக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர், தொட்டியின் மூடியை பொருத்தும் பணியை, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.