மன்னார் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் பாடசாலைகளாக்குவோம். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு.
ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று (03.09) மாலை 3.30 மணிக்கு மன்னார் நகரப்பகுதியில் இடம்பெற்ற நிலையில், அதிற் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
“ மன்னாரில் நூற்றுமுப்பத்து மூன்றுக்கும் அதிகமான பாடசாலைகள் உள்ளன, எதிர்காலத்தில் அவற்றை ஸ்மார்ட் பாடசாலைகளாக மாற்றுவதோடு, மன்னாரின் ஐந்து பிரதேச செயலர் பிரிவிலும் கைத்தொழிற்பேட்டைகளை உருவாக்கி இளஞைர், யுவதிகள் வேலை வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவோம்.
அது மட்டுமல்லாது பெண் தலைமைத்துவத்தைக்கொண்ட குடும்பங்களுக்கென சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான றிசாட் பதியுதீன்,ரவூப் ஹக்கீம், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹிருணிகா பிரேமச்சந்திர,சுஜீவ ஹேமசிங்க,அர்ஜுன ரணதுங்க, ஹுனைஸ் பாரூக், ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளர்கள்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உள்ளூராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள்,உப தலைவர்கள்,உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டதோடு,
சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.