கல் குவாரி தொழிலதிபர்கள் குழுவிற்காக ஒழுங்கு செய்த லால்காந்தவின் மதிய உணவை தேர்தல் ஆணையம் தடுத்தது…
நேற்று (03) கண்டி திலங்கா ஹோட்டலில் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த உட்பட நாட்டிலுள்ள 25 பாரிய கல்குவாரி தொழிலதிபர்களுடன் விசேட கலந்துரையாடலின் பின்னர் ஒழுங்கு செய்த மதிய உணவுக்கு தேர்தல் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.
கண்டி தேர்தல் காரியாலயத்தின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்று தேசிய மக்கள் சக்தி மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தின் தூதுக்குழுவினரிடம் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உபசரிப்பது தவறு என தெரிவித்து மதிய உணவு வழங்க விடாமல் தடுத்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலுக்கு நாடளாவிய ரீதியில் பல மாவட்டங்களில் கல் அகழ்வு தொழிலில் ஈடுபட்டுள்ள பிரதான வர்த்தகர்கள் வருகை தந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அப்போது, ஓட்டலில் மதிய உணவு புஃபே முறையில் ஒழுங்கு செய்து இருந்ததாலும், வெளிநாட்டினர் உட்பட ஏராளமானோர் மதிய உணவு சாப்பிட தயாராக இருந்ததாலும், அந்த உணவை சீல் வைக்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.