ரணிலுக்கு ஆதரவாக ஆட்டோக்களில் ‘இயலும் ஶ்ரீலங்கா ‘ ஸ்டிக்கர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பல முக்கிய போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
அந்த அமைப்புகளில் அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கம், நிபுணத்துவ முச்சக்கரவண்டி நிபுணத்துவ தேசிய சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை வல்லுநர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கம் ஆகியவை அடங்கும்.
இந்த சங்கங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி விக்கிரமசிங்க, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடனில் தவிக்கும் சாரதிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சாரதிகளின் கடனைத் திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைப்பதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டிகளில் ‘புலுவன் ஸ்ரீலங்கா’ (இயலும் ஶ்ரீலங்கா) ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.