ரணிலுடன் இணைய மாட்டோம்…விரும்பினால் ரணிலும் , அநுரவும் இணையலாம் – சஜித்
ஜனாதிபதியுடன் ஏன் இணைந்து கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நேற்று (04) பிற்பகல் காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற SJB பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது:
“எங்களிடம் தெளிவான திட்டமும் பார்வையும் உள்ளது. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ள பல விடயங்களைச் செய்ய முடியாது என்று கூறும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது எமக்கு போட்டியாக , குறுஞ்செய்தி மூலம் நாட்டுக்கு செய்திகளை அனுப்பி வருகின்றது.
எமது வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ள தருணத்தில் ஜனாதிபதியும் ஜே.வி.பியும் இணைந்து பொய்யான வதந்திகளை உருவாக்கி முகநூலில் போட்டு காசு கொடுத்து சமூக வலைதளங்கள் ஊடாக நாம் இணைய போவதாக விளம்பரப்படுத்தியுள்ளனர்.
“எதிர்வரும் 21ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் இந்த நாட்டின் 220 இலட்சம் மக்களுடன் நாம் ஒன்றிணைவோம். சீரழிந்த தோல்வியாளர்களான மிகவும் ஊழல் நிறைந்த அரசியல் கட்சிகளிடம் செல்ல மாட்டோம்.
“ஜனாதிபதிக்கும், திசைகாட்டி தலைவருக்கும் ஒன்று சேர வேண்டும் என்ற ஆசை அதிகம். இருவரும் வேண்டுமானால் இணையலாம். ” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.