நாட்டை திவால் நிலையில் இருந்து கட்டமைக்கும் பொருளாதாரத் திட்டங்களான 3.0ஐ SJB வெளியிட்டது.
அரசியல் சந்தர்ப்பவாதமும் சுயநலமுமே நாட்டின் முன்னேற்றத்திற்கு பிரதான தடையாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (04) கொழும்பில் SJB பொருளாதாரக் குழு இணைந்து தயாரித்த ‘நாட்டை திவால்நிலையிலிருந்து மீட்பதற்கான பொருளாதார திட்ட முன்மொழிவுகளுடன் கூடிய புளூபிரிண்ட் 3.0 பொருளாதாரத் திட்டம்’ வெளியீட்டு விழாவில் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு SJB பொருளாதார குழுவின் பிரதான உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ டி சில்வா, ஈரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இங்கு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு சீர்திருத்தங்கள் மற்றும் ஐக்கிய அரசியல் தலைமைத்துவத்தின் அவசரத் தேவையை வலியுறுத்தி உரையாற்றினார்.
“இலங்கையில் கடந்த காலங்களில் பல நம்பிக்கைக்குரிய திட்டங்கள் இருந்தன, ஆனால் அவை திறம்பட செயல்படுத்தப்படாததால் தோல்வியடைந்தன. அரசியல் சந்தர்ப்பவாதமும் சுயநலமும்தான் தேசத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய தடைகள். அதை முடிவுக்கு கொண்டு வர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். SJB மட்டுமே தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் திறன் கொண்ட ஒரே குழுவாகும். கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் உள்ளிட்ட பொருளாதாரக் குழு, உள்ளடக்கிய வளர்ச்சி, பொதுவான செழிப்பு மற்றும் நிலையான பொருளாதார சீர்திருத்தங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கை வளர்ச்சியில் முன்னணியில் உள்ளது.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு, நாட்டின் ஆழமான வேரூன்றிய சவால்களுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு விரிவான அரசியலமைப்பு சீர்திருத்தத்துடன் பாராளுமன்றத்தின் தெளிவான மற்றும் ஐக்கியப்பட்ட ஆணை தேவைப்படுகிறது. இந்த ஜனாதிபதித் தேர்தலில், அதற்கான திட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அணி இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு என்றார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச .