ஜனாதிபதியானதும் எல்லா அமைச்சுகளையும் நானே பொறுப்பேற்பேன் .. இல்லையேல் நால்வர் அமைச்சரவையை அமைப்பேன் : அனுர திஸாநாயக்க.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று தற்போதைய பாராளுமன்றத்தை ஆரம்பத்திலேயே கலைப்பேன் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை, அந்த இடைக்காலத்தில் நாட்டில் அரசியலமைப்பு ரீதியில் ஆட்சி நடத்தப்படும் என்றார்.
தான் ஜனாதிபதியான பின்னர் காலியான பாராளுமன்ற ஆசனத்திற்கு மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் அந்த நேரத்தில் நாட்டை ஆள்வதற்கு அவர்கள் மூவரும் தானும் இணைந்து நான்கு பேர் கொண்ட அமைச்சரவையை அமைப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு வழிமுறையாக அனைத்து அமைச்சுகளையும் ஜனாதிபதியின் கீழ் கொண்டு சென்று அதற்குள் நாட்டை நடத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காபந்து அரசாங்கம் தேவையென்றால், அவ்வாறானதொன்றையும் ஏற்படுத்த முடியும் என்று கூறிய அவர், அந்த முறைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறினார்.
தேசிய மக்கள் சக்தியினால் நடாத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.