திசைகாட்டிக்கு அதிகாரம் வழங்குவது தெற்காசியாவுக்கே அச்சுறுத்தல் – விக்னேஸ்வரன்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவது தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திறன் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இல்லை எனவும், அவரை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் அவர் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பவில்லை. 88/89ல் இவர்கள் செய்த அழிவுச் செயல்களைப் பார்க்கும்போது வரலாற்றை மறந்து நிம்மதியாக இருக்க வழியில்லை. இந்த நாட்களில் அனுரகுமாரவின் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களைப் பார்க்கும் போது அவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என பலரும் கனவு காண்கிறார்கள். ஆனால் அது ஒருபோதும் நடக்காது.
அப்படி நடந்தாலும், கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த காலம் வரையாவது அவரால் பதவியை தொடர முடியாது,” என தெரிவித்துள்ளார்.