ரணிலை ஆதரித்து நாளை தொடக்கம் சூறாவளி பிரசாரம்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரசார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில் நாளை காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

9 மாகாணங்கள், 160 தேர்தல் தொகுதிகள், 341 உள்ளூராட்சி சபைகள், 4 ஆயிரத்து 984 வட்டாரங்கள், 14 ஆயிரத்து 26 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மற்றும் 53 ஆயிரத்து 896 கிராம வீதிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவின் பாத்திரத்தை மக்களுக்கு அறிந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்று ரணிலின் தேர்தல் நடவடிக்கைக்கான ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் “இயலும் ஸ்ரீலங்கா” விஞ்ஞாபனத்தின் உள்ளடக்கம் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இதன் கீழ் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை எதிர்கொள்ளாத வகையில் பொருளாதார ஸ்திரத்தன்மை கொண்ட நாட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கையையும் ஒருங்கிணைக்கும் இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.