ரணில்-அநுர நட்புறவு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது : நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் காட்டம்.

இரகசியமான ரணில்-அநுர நட்புறவு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சபை உறுப்பினர்…

என் கைகள் சுத்தமாக இருக்கின்றன

ரணில், அநுர இருவரும் இன்று ஒரே கதையைச் சொல்கிறார்கள். ரணிலின் கருத்துக்களை, ரணிலின் சேறடிப்புகளை அநுர கிராமம் கிராமமாக கொண்டு செல்கிறார் அனுர. ரணிலின் வேலைத்திட்டத்தை அனுர முன்னோக்கி கொண்டு செல்வார் என்பது இந்த இடத்தில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. மஹியங்கனையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்து அவர் நிச்சயமாக தோற்கடிக்கப்படுவார் என்பதை உணர்த்துகிறது. அதேபோன்று சஜித்தை தோற்கடிக்க ஜனாதிபதி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ய தயார் என்பதும் நிரூபணமாகி வருகின்றது.

நான் SJB உருவாக்கத்தின் முன்னோடி; அவ்வாறே 2000ஆம் ஆண்டு அரசாங்கத்தின் போது ராஜபக்சவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி SJBயை உருவாக்க வேலை செய்தேன். அநுர வெற்றி பெறுவார் என போட்டியாளர்கள் பல்வேறு கூட்டுச் செய்திகளை உருவாக்கி வருவதற்கு நான் முற்றிலும் எதிரானவன். இரகசிய கொடுக்கல் வாங்கல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி மக்களின் உரிமைகளுக்காக நான் நின்றதால் வீண் அவதூறு பிரச்சாரங்களை ரணில் அனுர குழு முன்னெடுத்துள்ளது. ஆனால் என் கைகள் அழுக்கானவையில்லை; என் கைகள் சுத்தமாக இருக்கின்றன. ரணிலும் அநுரவும் எமது வெற்றியின் மீது வெறிகொண்டுதான் இவற்றையெல்லாம் செய்கிறார்கள்.

ஜேவிபிக்கு வாகன அனுமதி கிடைத்ததா இல்லையா…?

அநுர, விஜித, கலப்பத்தி, நளிந்த எல்லாரும் கார் பெர்மிட் பெற்றிருக்கிறார்களா இல்லையா என சொல்ல சவால் விடுகிறேன்..? இல்லை என்று சொல்லுங்கள். ஜே.வி.பி.யின் முன்னாள் உறுப்பினர் NPP சட்டத்தரணி சுனில் வட்டகல 2016 இல் பெற்ற வாகன அனுமதிப்பத்திரத்தின் ஒலிப்பதிவு என்னிடம் உள்ளது.

2016ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாகன அனுமதிப்பத்திரத்தை ஜேவிபி உறுப்பினர்கள் எடுத்தார்களா? இல்லையா? நான் அவர்களிடம் கேட்கிறேன். ஆனால் எனக்கு பார் அனுமதி, நிலம், அரசு வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து எந்த வித சலுகையும் நான் பெறவில்லை. எவ்வாறாயினும் ரணில் அரசாங்கம் வழங்கிய வாகனங்களை எடுத்தார்களா? இல்லையா? என்பதை ஜேவிபி உறுப்பினர்கள் தயக்கமின்றி அறிவிக்க வேண்டும் என்றார் அவர்.

Leave A Reply

Your email address will not be published.