சஜித்தின் ஆங்கில அறிவு மிக அதிகம்.. ஷேக்ஸ்பியர் கூட சஜித்திடம் டியூஷன் எடுத்தவர்தான் : ரணில் நக்கல் (Video)

சஜித் பிரேமதாசவின் ஆங்கில அறிவு தொடர்பில் எவ்வித வாதமும் முன்வைக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வில்லியம் ஷேக்ஸ்பியர் வெனிஸ் வியாபாரியை எழுதுவதற்கு முன் சஜித் பிரேமதாசவின் டியூஷன் வகுப்புகளுக்கு வந்ததாக ஒரு கதை இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

“ சஜித் பிரேமதாசவுக்கு ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரியும் என்று அவர்களது மக்கள் கூறுகின்றனர். நான் அதை விவாதிக்கப் போவதில்லை. ஏனெனில் கவிஞர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவருடைய டியூஷன் வகுப்புகளுக்கு வந்தவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? The Merchant of Venice எழுத முன் அந்த வகுப்பிற்கு வந்தார். அதைப் பற்றி நாங்கள் வாதிடப் போவதில்லை.

எனவே நான் ஒரு குழு பற்றி பேசவில்லை. நான் நன்றாக இருந்தால் தேர்வு செய்யுங்கள் . பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்களில் இருந்தே அணி தெரிவு செய்யப்பட வேண்டும். நான் விரும்பியபடி செய்ய முடியாது. எனவே கட்சி வேறுபாடின்றி நல்லவர்களை நாடாளுமன்றத்தில் அமர்த்துங்கள்.

இம்முறை நான் ஜனாதிபதியானவுடன் பாராளுமன்றத்தில் இருந்தே அணியை எடுத்தேன். நான் தேர்வு செய்ய போகவில்லை. எந்த அணியை தந்தாலும் , நான் அவர்களை வைத்து வேலை செய்து காட்டுவேன். தலைவர் அப்படிப்பட்டவர்தான் தலைவராகலாம்.” என்றார் ரணில்.

Leave A Reply

Your email address will not be published.