மாத்தறை ‘DP Education’ நிறுவனத்திற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாத்தறை மாவட்டத்திலுள்ள தெனிய கட்டபருவ விகாரையில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவினால் நடத்தப்படும் ‘DP கல்வி’ நிறுவனத்தின் கண்காணிப்பு விஜயத்தில் கலந்துகொண்டார்.

மாத்தறை தெனியாய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டதன் பின்னரே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனத்தில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாணவர்களுடன் அவர் சிநேகபூர்வ சந்திப்பை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர், ஜனாதிபதி அவர்கள், நிறுவன நிர்வாக அதிகாரிகளுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளதுடன், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.

அங்கு கல்வி கற்கும் குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான ஆதரவை நிறுவனத்துக்கு வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறான கல்வி நிலையங்கள் பேணப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.