கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் வெளியான மரபணு சோதனை விவரம்!
கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கில் மரபணு சோதனை விவரம் வெளியாகியுள்ளது.
கொல்கத்தாவின் ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் தான் நிரபராதி என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், செமினார் ஹாலுக்குள் நுழைந்தபோது அந்தப் பெண் சுயநினைவின்றி இருந்தார். சம்பவத்தன்று அந்த அறைக்குள் அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
இதனால் பீதியுடன் அறையை விட்டு வெளியேறிவிட்டேன். இதில்தான் புளூடூத் ஹெட்செட் விழுந்து இருக்கும் என்றுத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த குற்றத்தில், சஞ்சய் ராய் ஒருவர் மட்டுமே குற்றவாளியாக இருக்க முடியும். பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு விசாரணையில், இதுவரை வேறு யாருக்கும் தொடர்பிருப்பதற்கான எந்த தடயமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.