மன்னார் தள்ளாடி 54 வது பிரிவு படையினரின், 14 வது ஆண்டு நிறைவு விழா.

மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப் பிரிவின் 14 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வுகளின் இறுதி நிகழ்வு
இன்றையதினம் (07.09) காலை 9.00 மணியளவில் மன்னார் நகர பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

54 வது காலாட்படைப் பிரிவின் தளபதி மேஜர். RP.ராஜபக்‌ஷவின் வழிகாட்டுதலிலும், சிவில் சமூகத் தொடர்பு அதிகாரி மேஜர் M.V. பெர்னாண்டோவின் ஏற்பாட்டிலும் நடைபெற்ற இந்நிகழ்வில்,

மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட 15   பாடசாலைகளுக்கிடையே (05.09) அன்று நடாத்தப்பட்ட பாண்ட் இசை வாத்திய போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகளுக்கு கேடயங்கள் வழங்கிவைக்கப்பட்டதோடு, மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்படன.

அத்துடன் மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட கல்வியில் முதல்நிலை வகிக்கும் 60 மாணவர்களுக்குப் புத்தகப்பை அடங்கலாகக் கற்றல் உபகரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மற்றும் மாவட்ட ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட 60 வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் படையினர் இணைந்து விளையாடிய கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு கேடயங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில், பிரதம விருந்தினராக, மேஜர் ஜெனரல் JPC. பீரிஸ் வன்னி மாவட்டம் , கௌரவ விருந்தினர்களாக மன்னார் ஆயர். இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகை, மாவட்டச் செயளாலர். க. கனகேஸ்வரன் ஆகியோர் பங்கேற்றனர்.

மற்றும் சிறப்பு விருந்தினர்களாகப், பொலிஸ் அத்தியட்சகர் வை. சந்திரபால மற்றும் முப்படை அதிகாரிகள், மதத்தலைவர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்

Leave A Reply

Your email address will not be published.