மும்பை அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகத்தில் மிரட்டிய பும்ரா, 4 விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் எமிரேட்சில் தற்போது நடக்கிறது. அபுதாபியில் நேற்று நடந்த லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி கப்டன் ரோகித் சர்மா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

மும்பை அணிக்கு ரோகித் சர்மா, குயின்டன் டி கொக் ஜோடி துவக்கம் கொடுத்தது. குயின்டனை (23), தியாகி அவுட்டாக்கினார். இது இவரது முதல் ஐ.பி.எல்., விக்கெட்டாக அமைந்தது. அடுத்து ரோகித்துடன் இணைந்த சூர்யகுமார் பவுண்டரி மழை பொழிந்தார். தியாகியின் மூன்றாவது ஓவரில் மூன்று பவுண்டரி அடித்தார்.

மூன்றாவது ஓவரை வீசிய கோபால், ராஜஸ்தான் அணிக்கு திருப்பம் தந்தார். இவரது முதல் பந்தில் சிக்சருக்கு ஆசைப்பட்ட ‘அபாய’ ரோகித் (35), சிக்கினார். அடுத்த பந்தில் இஷான் கிஷான் ‘டக்’ அவுட்டானார்.

மனம் தளராத சூர்யகுமார், கோபால் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரி அடிக்க, மும்பை அணியின் ஸ்கோர் 11.2 ஓவரில் 100 ரன்களை கடந்தது. சூர்யகுமார் அரைசதம் எட்டினார். டாம் குர்ரான் வீசிய, போட்டியின் 18 வது ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டன. மும்பை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தது. ஐ.பி.எல்., அரங்கில் தனது அதிகபட்ச ரன்கள் எடுத்த சூர்யகுமார் (79), பாண்ட்யா (30) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வல், பட்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வல் (0), பவுல்ட்டின் 2வது பந்தில் அவுட்டாக, ஸ்மித் (6), பும்ரா ‘வேகத்தில்’ வீழ்ந்தார். சஞ்சு சாம்சன் ‘டக்’ அவுட்டானார். லாம்ரர் (11) அணியை கைவிட்டார்.
மறுபக்கம் அரைசதம் கடந்து போராடிய பட்லரை (70), போலார்டு அசத்தல் ‘கேட்ச்சில்’ வெளியேற்றினார். டாம் கர்ரான் (15) ஏமாற்றினர், டிவாட்டியா (5), கோபாலை (1), பும்ரா அவுட்டாக்கினார். தொடர்ந்து ஆர்ச்சரையும் (24) ‘பெவிலியன்’ அனுப்பி வைத்தார்.
ராஜஸ்தான் அணி 18.1 ஓவரில் 136 ரன்னுக்கு சுருண்டது. மும்பை அணி 57 ரன்னில் வென்றது. வேகத்தில் மிரட்டிய பும்ரா 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

Leave A Reply

Your email address will not be published.