ஏழு தொழிலாளர்கள் குளவி கொட்டி பாதிப்பு.

பொகவந்தலாவை, கேர்க்கசோல்ட் தோட்டத்தில் ஏழு தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
குளவிக்கொட்டுக்கு இலக்கானவர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.