அனுரவுக்கு உடல் நலமின்மையால் , டில்வின் மேடைகளில்…….

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான அனுர திஸாநாயக்கவுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா மாத்தறை மொரவக்க பிரதேசத்தில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றிய அனுர திஸாநாயக்க கடின உழைப்பினால் வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்த அவர், சற்று ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் மேடையில் இணைந்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.