தீவைத்துக் கொல்லப்பட்ட உகாண்டா ஒலிம்பிக் வீராங்கனையைக் கௌரவிக்கும் பாரிஸ்

காதலனால் தீவைத்துக் கொளுத்தப்பட்டதில் மாண்ட உகாண்டாவைச் சேர்ந்த ஒலிம்பிக் வீராங்கனை ரெபெக்கா செப்ட்டெகேவை (Rebecca Cheptegei) பாரிஸ் கௌரவிக்கவுள்ளது.

பாரிஸிலுள்ள விளையாட்டு வளாகம் ஒன்றுக்கு ரெபெக்காவின் பெயர் சூட்டப்படும் என்று பாரிஸ் மேயர் என் ஹிடால்கோ (Anne Hidalgo) தெரிவித்துள்ளார்.

“பாரிஸில் அவர் தமது திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார். அவரது வலிமையை நேரில் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்று ஹிடால்கோ சொன்னார்.

“பாரிஸ் அவரை மறக்காது. அவரது நினைவாக ஒரு விளையாட்டு வளாகத்துக்கு அவரின் பெயரைச் சூட்டுவோம்” என்றார் அவர்.

33 வயது ரெபெக்கா கடந்த மாதம் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று 44ஆவது இடத்தில் வந்தார். இது அவர் கலந்துகொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி என்று AFP செய்தி குறிப்பிடுகிறது.

டிக்சன் எண்டிமா மரங்காச் (Dickson Ndiema Marangach) என்ற ஆடவர் ரெபெக்காவைப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை (1 செப்டம்பர் 2024) ரெபெக்காவின் வீட்டில் தாக்குதல் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.