இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரால் நெடுந்தீவில் உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ் மாவட்ட கிளையினரின் ஏற்பாட்டில் நெடுந்தீவு பகுதியிலுள்ள மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில்இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவர் ஜெகத் அபயசிங்க மற்றும் யாழ்மாவட்டக்கிளை ஆளுநர்சபை அதிகாரிகள் விசேட படகு மூலம் நெடுந்தீவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள், நெடுந்தீவு பிரதேசசபைக்கு உதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர்.