நிர்வாணத்தைக் காட்டி 53 வயது சுவிஸ் தமிழரிடம் 50 லட்சம் மோசடி செய்த 03 பெண்கள் கைது.

யாழ்ப்பாணத்தில் பிறந்து சுவிட்சர்லாந்தின் குடியுரிமை பெற்ற 53 வயதுடைய தமிழர் ஒருவரை ஏமாற்றி ஐம்பது இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை கடந்த 8ஆம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
மூன்று பெண்களும் 23 வயது இளம் பெண் ஒருவரை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட டிக் டோக் வீடியோவை சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நபரின் கைபேசிக்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர், அந்த இளம் பெண்ணுக்கும் சுவிஸ் நாட்டவருக்கும் இடையே நட்பை ஏற்படுத்தி, அதை படிப்படியாக அவர்கள் உடலுறவு கொள்ள விரும்பும் அளவுக்கு வளர்த்து, இருவரும் வீடியோக்கள் மூலம் பாலியல் செயல்களையும் செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர், சுவிஸ் தமிழர் அவள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு அவ்வப்போது பணம் அனுப்பியுள்ளார்.
அந்த பணத்தில் ஒரு பகுதியை சுவிஸ் தமிழர் ,யாழ்ப்பாணம் வந்த பிறகு இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு சொகுசு வீடு ஒன்றைக் கட்ட அனுப்பப்பட்டுள்ளது.
அந்த இளம் பெண் அப்படி வாழ விரும்புவதாக சுவிஸ் தமிழரிடம் தெரிவித்ததையடுத்து, அதற்கான பணத்தையும் அவர் அனுப்பியுள்ளார்.
காலப்போக்கில் அந்த பெண், தொலைபேசி அழைப்புகளை கூட நிறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனது உறவினர்களைப் பார்க்கவும், தான் காதலித்த பெண்ணுடன் விடுமுறையைக் கழிப்பதற்காகவும் யாழ்ப்பாணம் வந்த சுவிஸ் பிரஜை , குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தேடி போன போது, அவ்வாறானவர்கள் யாரும் அங்கு வசிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
பின்னர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்த அவர், தான் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு இலக்கங்களையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த யாழ்.பொலிசார், அந்தக் கணக்கு 47 வயதுடைய பெண் ஒருவருடையது என்பதை உறுதிப்படுத்தியதையடுத்து, அவரைக் கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது , நடந்த அனைத்தையும் அவர் வெளிப்படுத்தியதை அடுத்து, மூன்று பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.