தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த இணக்கம்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (10) முதல் அடிப்படை சம்பளமாக 1350 ரூபாவை வழங்க தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்துள்ளன என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அதனை வழங்க முன்வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து 1350 ரூபா அடிப்படைச் சம்பளமாக வழங்கப்படும், இது 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய தொகையான 350 ரூபா பேச்சுவார்த்தை மூலம் வழங்கப்படும் என செந்தில் தொண்டமான் மேலும் தெரிவித்தார்.